விண்டோஸ் 10இற்கு சவால் விடும் Ubuntu 16.04 LTS

Sunday, April 24th, 2016

உலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவரும் இயங்குதளமாக விண்டோஸ் காணப்படுவது அறிந்ததே. விண்டோஸ் இயங்குதளத்திற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட மற்றுமொரு இயங்குதளமே Ubuntu ஆகும்.

இது முற்றிலும் இலவசமாக கிடைக்கக்கூடியதாக இருப்பதுடன், மூல குறியீட்டில் விருப்பம்போல் மாற்றங்களை (Source Code) ஏற்படுத்திக்கொள்ளவும் முடியும். இதன் காரணமாக இவ் இயங்குதளமும் கணினி வல்லுனர்கள் மத்தியில் பிரபல்யமானதாகக் காணப்படுகின்றது. தற்போது இவ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான Ubuntu 16.04 LTS (Long Term Support) வெளியிடப்பட்டுள்ளது.

இப் பதிப்பிற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் 5 வருட சேவைக்கு பிந்திய உதவி (Support) வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப் புதிய பதிப்பானது விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் பயனர் இடைமுகத்தினையும், வசதிகளையும் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

Related posts: