யாஹூ நிறுவனத்தின் பல வணிகங்களை வாங்கியது வெரிசான்!

Wednesday, July 27th, 2016

அமெரிக்காவின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வெரிசான், இணையத்தில் முன்னோடியாக திகழும் யாஹூவின் முக்கிய வணிகங்களை 4.83 பில்லியன் டாலர்களுக்கு வாங்க ஒப்புக்கொண்டுள்ளது..

யாஹூவின் 20 ஆண்டுகால சுதந்திர செயல்பாடுகள் முடிவுக்கு வரும் வகையில்இது அமைந்துள்ளது.

வெரிசான் நிறுவனம் ஐந்து மாதங்கள் ஏலத்தில் பங்கேற்று போராடி யாஹூவை பெற்றுள்ளது.

இந்த கையகப்படுத்துதல் டிஜிட்டல் மூலம் வரும் விளம்பர வருவாயை அதிகப்படுத்த உதவும் என வெரிசான் நம்புகிறது.

இந்த ஒப்பந்ததத்தில், யாஹூ மின்னஞ்சல் சேவை, செய்தி மற்றும் விளையாட்டு இணையதளங்கள், விளம்பர கருவிகள் மற்றும் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிறுவனத்தின் வருவாயும் இதில் அடங்கும்.

ஆனால், சீன ஆன்லைன் பெரு நிறுவனமான அலிபாபாவில் யாஹூ வைத்துள்ள பங்குகள் இதில் அடங்காது.

150512144713_verizon_950x633_ap

160516222528_sp_yahoo_browser_logo_624x351_afp_nocredit

 

Related posts: