நியூசிலாந்தில் சுமார் 400 திமிங்கலங்கள் கடற்கரையில் கரையொதுங்கின!

Saturday, February 11th, 2017

நியூசிலாந்தின் சவுத் தீவுப் பகுதியின் வடக்கே உள்ள கோல்டன் பே பிராந்தியக் கடற்கரையில் 400 க்கும் அதிகமான திமிங்கலங்கள் அலையில் அடித்துவரப்பட்டு கரையொதுங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கரையொதுங்கிய திமிங்கலங்களில் குறைந்தது 250 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

கரையொதுங்கியவை அனைத்தும் பைலட் வகை திமிங்கலங்கள் எனவும், உயிருடன் உள்ள திமிங்கலங்களைக் காப்பாற்ற தன்னார்வத் தொண்டர்களும் மக்களும் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தன்னார்வத் தொண்டர்களால் சுமார் 50 திமிங்கலங்கள் வரை மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளன. நேற்று இரவு முதல் இவை கரையொதுங்கி வரும் நிலையில், இன்று அதிகாலை வேளையில் அவற்றை பிரதேச மக்கள் கண்ணுற்று, அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான திமிங்கலங்கள் இவ்வாறு கரையொதுங்கியமைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. நியூசிலாந்தில் 1918 ஆம் ஆண்டில் சதம் தீவுப் பகுதியில் ஆயிரக்கணக்கான திமிங்கலங்கள் இவ்வாறு கரையொதுங்கியிருந்தன. அதன் பின்னர், 1985 ஆம் ஆண்டில் ஆக்லேண்டில் சுமார் 450 திமிங்கலங்கள் கரையொதுங்கியிருந்தன. அதனையடுத்து, தற்போது தான் பாரியளவில் திமிங்கலங்கள் அங்கு கரையொதுங்கியுள்ளன.

1-3

Related posts: