மகாபாரதம் விஞ்ஞானத்தின் தோற்றப்பாடா?  

Friday, November 4th, 2016

விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய புதிராக காணப்படும் ஆராய்ச்சிகளில் செயற்கை கருப்பையில் உயிரினங்களை உருவாக்கும் முயற்சியாகும் (Artificial uterus)உண்மையில் இது கடவுளின் செயற்பாட்டை மனிதன் ஆராய ஆரம்பிக்கின்ற அடிபடை என்று கூட கூறலாம்.

மகாபாரதத்தின் ஒரு கட்டத்தில் “துரியோதனனின் தாய் காந்தாரி என்பவள் கர்ப்பமாக இருக்கும் போது கல்லால் தன் வயிற்றில் அடித்துக்கொள்வதால் கர்ப்பம் கலைந்து விடுகிறது.

அப்படி கலைந்த கருவின் துண்டுகளை வேதவியாசமுனிவர் ஒரு குகையில் வைத்து 100 நெய் பனைகளில் இட்டு வளர்ப்பார், அப்படி பிறந்தவர்களே துரியோதனனும் அவரது தம்பிகளும்”என கூறபட்டிருக்கும் இதனை கற்பனையின் கதையாற்றல் என்ற வடிவத்தில் மட்டும் நோக்கமுடியாது.

படைப்பாற்றல் என்பது பலவாறான கோணங்களில் பலவிதமாக சிந்திக்ககூடியது.அதிலும் இவ்வாறான ஓர் விடயம் அறிவியலின் உச்சம்அவ்வாறு என்றால் அன்றைய மனிதர்கள் இதனை புரிந்துகொள்ளாமல் காணப்பட்டனரா?அல்லது இது அப்போதைய காலபகுதியில் சாதாரண அறிவியலாக தென்பட்டதா?

அதுவும் இல்லையென இது முழுக்க முழுக்க வேத வியாசகரின் கற்பனையாற்றல் என்றால் அதுவும் பொய்யாகிபோகும்.காரணம் எந்த ஒரு கற்பனைக்கு எட்டாத கருத்தையும் அடிபடையான ஒருவிடயத்தை வைத்து திரிவுபடுத்தாமல் கூறமுடியாது.

மேலும் இன்று EUFI (extrauterine fetal incubation) என்ற பெயரில் ஆடுகளை இந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.ஆனால் அதில் இன்றளவு எவ்வித முன்னேற்றம் காணப்படாவிடினும் எதிர்காலத்தில் இது சாத்தியமாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

mahaparatham

Related posts: