“மூடநம்பிக்கைகளின் மலைத்தொடர்” வேற்றுகிரகவாசிகளின் வசிப்பிடமா? அல்லது நரகத்திற்கான நுழைவாயிலா?

Wednesday, November 16th, 2016

கேள்விகள் எழுவது இலகு ஆனால் அதற்கான பதில் இலகுவாக கிடைக்கப்பெறாது.எப்போதும் மர்மங்களின் பின்னால் இவ்வாறான பதில் அற்ற பல கேள்விகள் காணப்படதான் செய்யும். அந்த வகையில் அமைந்த ஓர் மலைத்தொடர் தான் அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் காணப்படும்“மூடநம்பிக்கைகளின் மலைத்தொடர்”(Superstition Mountains).

1800ஆம் ஆண்டு “ஜேக்கப் வால்ட்ஸ்” (Jacob Waltz) என்ற நபரே முதலாவதாக குறித்த இடத்தினை அடையாளங்கண்டார்.மேலும் அங்கு மிகப்பாரிய அளவிளான தங்கபுதையல் இருப்பதனையும் கண்டறிந்த அவர் குறித்த மலை தொடர்பான கருத்துகளை உலகிற்கு தெரியப்படுத்தவில்லை.

நோயின் தாக்கத்தால் அவதிப்பட்ட “ஜேக்கப் வால்ட்ஸ்” இறுதியில் தனக்கு நெருங்கிய ஒருவரிடம் மட்டும் குறித்த தகவலை பகிர்ந்துகொண்ட பின் இறந்துவிட்டார். இதன் பின் குறித்த நபர் அத்தகவலை இன்னும் சிலருக்கு தெரியப்படுத்த அந்த சிலரின் ஒருவரால் அவர் கொலைசெய்யப்பட்ட காரணத்தால் தங்கப்புதையல் காணப்படும் இடம் யாருக்குமே தெரியாமல் போனது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

இருந்தும் குறித்த புதையலை தேடி பலர் அந்த மலைத்தொடரை சென்றடைந்தனர் ஆனால் சென்றவர்கள் யாரும் திரும்பவில்லை மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.அதனை மீறியும் திரும்பி வந்தவர்கள் தாங்கள் அங்கு புதையலை காணவில்லை என்ற கருத்தைதான் முன்வைத்தனர்.

மேலும் அங்கு சென்ற இன்னும் சிலர் அவ்விடத்தில் நிறைய மனித எலும்புகூடுகள் காணப்பட்டதாக கூறி அச்சத்தை ஏற்படுத்தும் திகிலூட்டும் மலையாக அதனை பார்வையிட வைத்தனர். குள்ளமனிதர்கள் நீங்காத மர்மமாக காணப்பட்டாலும் அநேகமானவர்களால் விரும்பி பார்க்கப்படும் விடயங்களில் இதுவும் ஒன்று. குறித்த மலைத்தொடருக்கு சென்று மீண்ட வந்த சிலர் அங்கு Tuar-Tums எனப்படும் குள்ளமனிதர்கள் வசிப்பதாகவும் அவர்களே குறித்த புதையலை பாதுகாத்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும் வேற்றுகிரகவாசிகளும் அடிக்கடி அவ்விடத்திற்கு வந்துவிட்டு செல்வதாகவும் அவர்களும் தங்கபுதையலை பாதுகாக்கின்றனர் என கூறினர். அப்பகுதியை அண்டி வாழும் சில மதகுருமார்கள் அந்த மலையின் இடுக்கில் தான் நரகத்திற்கான நுழைவாசல் காணப்படுவதாகவும் அவை யாவும் தீய சக்திகளின் கட்டுபாட்டிற்குள் மத்தியில் தான் காணப்படுவதாகவும் கூறினர்

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

இக்கருத்து இன்றளவும் அங்கு வாழும் சில மூடநம்பிக்கை பிரியர்களால் நம்பப்பட்டு தான் வருகின்றது. குறித்த மலைத்தொடரில் 115-125F வரை வெப்பம் காணப்படுவதால் அது பாலைவனமாகவே பார்க்கபடுகின்றது இருந்தும் அவ்வப்போது மழை பெய்தாலும் சூரியனின் வெப்பத்தின் பொருட்டு அதுவும் சற்று நேரத்திலேயே வற்றிவிடுகின்றது.

மேலும் அங்கு நீர்நிலைகளும் இல்லாதவிடத்தும் மலைத்தொடர் குறுகிய குகை இடுக்குகளை கொண்டிருப்பதாலும் அதனுள் இறுகியும் நீர் அற்றும் மனிதர்கள் இறந்திருக்கக்கூடும் என தெரிவிக்கின்றனர்.

எது எப்படி ஆயினும் தங்க புதையல் வேற்றுகிரகவாசிகளின் வசிப்பிடம் மற்றும் நரகத்திற்கான நுழைவாயில் போன்ற அனைத்து கருத்துகளுமே ஆய்வாளர்களின் பார்வையில் மூடநம்பிக்கைகளாகவே பார்க்கப்படுகின்றது. இருந்தும் மர்மம் என்ற கருந்து என்றுமே மறையாத ஒன்று.

Related posts: