பேஸ்புக் பாவனையாளர்களுக்கு புதிய வடிவில் அச்சுறுத்தல்!

Monday, September 12th, 2016

பேஸ்புக் வலைத்தளத்தில் தற்போது புதிய வடிவில் வைரஸ் ஒன்று பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் ஆனது பேஸ்புகில் காணொளி இணைப்பை தமது டைம்லைனில் பகிர்ந்துள்ளதாக அறிவிப்பு செய்யும், குறித்த அறிவிப்பினை கிளிக் செய்யும் போது உங்கள் பேஸ்புக் கணக்கில் ஊடாக குறித்த வைரஸ் பரவுதல் இடம்பெறுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த வைரஸினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை  எனவே எவ்வித புதிய லிங்க் (link) உங்களது பேஸ்புக் பக்கத்திற்கு பகிரப்பட்டிருந்தாலும் அது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

fb

Related posts: