பென்சிலினை கண்டுபிடித்த பூஞ்சணம் ஏலம்!

அலெக்சாண்டர் பிளமிங் பென்சிலின் மருந்தை கண்டுபிடிக்க காரணமான 90 ஆண்டுகள் பழைமையான பூஞ்சணம் 14,600 டொலருக்கு ஏலம்போயுள்ளது.
உலகின் முதல் நுண்ணுயிர்கொல்லி மருந்தை காண்டுபிடிக்க காரணமான அந்த பூஞ்சணம் கண்ணாடி பெட்டி ஒன்றில் பாதுகாக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை லண்டனில் ஏலம் விடப்பட்டது. அதனை பெயரை வெளியிடாத ஒருவரே ஏலம் பெற்றுள்ளார்.
1928இல் லண்டனில் உள்ள செயிண்ட் மேரி மருத்துவமனையில் கிருமிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தபோது மூடப்பட்டிருந்த தட்டொன்றில் படிந்த மெல்லிய பூஞ்சணம் பென்சிலின் மருந்தை கண்டறிய காரணமாக அமைந்தது.
இந்த மருந்து உலகில் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களை பாதுகாக்க உதவியமை குறிப்பிடத்தக்கது.
பிளமிங்கின் மருமகளின் சேகரிப்பில் இருந்திருக்கும் இந்த பூஞ்சணம் அவரது நேரடி வாரிசு வாழியாகவே ஏலம் விடப்பட்டுள்ளது.
பிளமிங் ஆய்வு நடத்திய பூஞ்சணத்தின் பெயர் பென்சிலினா நோடேடம் என்பதால் அவர் கண்டுபிடித்த மருந்துக்கு பென்சிலின் என்று பெயரிட்டார்.
Related posts:
|
|