புற்றுநோய்களை ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்க புதிய சோதனை!

Thursday, December 6th, 2018

மனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்களையும் ஒரே ஒரு நிமிடத்திற்குள் கண்டுபிடிக்கக்கூடிய முறை ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

பரம்பரை அலகினை அடிப்படையாகக் கொண்டே இப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த ஆய்விற்காக நோயாளியில் காணப்படும் கட்டியிலிருந்து இழையம் ஒன்று பெறப்படும்.

எனினும் இதுவரை மனிதர்களில் இச் சோதனை பரிசோதிக்கப்படவில்லை. தற்போது எலிகளில் இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இப் பரிசோதனையை மேற்கொள்ளக்கூடிய சாதனம் ஒன்றினையும் உருவாக்குவதற்கு குறித்த விஞ்ஞானிகள் குழு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதுவரை சுமார் 200 வரையான இழையங்களையும் இரத்த மாதிரிகளையும் இதே முறையில் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். ஆய்வானது 90 சதவீதம் வெற்றிகரமாக இடம்பெற்றது எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: