13,000 வருடத்துக்கு முன்னைய இளம்பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

Tuesday, August 29th, 2017

13,000 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த அமெரிக்க பெண்ணின் முழு உடல் எலும்புக்கூடாக மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தவர்கள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மெக்சிகோவின் Tulum நகரில் உள்ள தண்ணீருக்கு அடியில் இருக்கும் குகையில் 13,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து 16 வயதில் உயிரிழந்த பெண்ணின் முழு எலும்புக்கூடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.கடந்த 2007-ல் இது கண்டுபிடிக்கப்பட்டாலும் எலும்புக்கூடுகளை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து வந்ததால் சில மாதங்களுக்கு முன்னர் தான் வெளியுலகுக்கு இதுகுறித்து அறிவித்துள்ளனர்

NAIA என பெயர் சூட்டப்பட்டுள்ள அப்பெண் கடைசி பனி யுகத்தில் வாழ்ந்தவர் என்றும், அவரின் டி.என்.ஏ தற்போது வாழும் அமெரிக்க மக்களின் டி.என்.ஏ-யுடன் ஒத்துப்போவதும் தெரியவந்துள்ளது. 5 அடி உயரம் மற்றும் 50 கிலோ எடை கொண்ட பெண் என்றும், உயிரிழக்கும் முன்னர் அவர் குழந்தையை பெற்றெடுத்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.அந்த காலகட்டத்தில் NAIA இருந்த குகை தண்ணீருக்கு மேல் இருந்துள்ளது எனவும், குறித்த பெண் பஞ்சம் காரணமாக பட்டினியால் வாடியிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது

Related posts: