புதிய வசதிகளுடன் கூகுள் பிளஸ்!

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட சமூகவலைத்தளமான கூகுள் பிளஸினை பல மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பேஸ்புக் வலைத்தளத்திற்கு போட்டியாக கூகுள் பிளஸிலும் பல்வேறு சிறப்பம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.இப்படியிருக்கையில் விரைவில் புதிய வசதிகளுடனான பதிப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப் புதிய பதிப்பில் வெவ்வேறுபட்ட திரைகளுக்கு ஏற்றவாறு ஒத்திசைவாக்கம் செய்யக்கூடிய வசதி, தரம் குறைவான கருத்துரைகளை (Comments) மறைக்கும் வசதி உட்பட மேலும் சில வசதிகள் புதிதாக தரப்படவுள்ளன.இவ் வசதிகள் உள்ளடங்கிய புதிய பதிப்பானது இம்மாதம் 24ம் திகதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
Related posts:
சிங்கப்பூரில் களைகட்டும் தீபாவளி !
மனித மூளையைக் கொண்டு கணனியைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தில் திருப்பம்!
சுமார் 150 ஆண்டுகளின் நிகழவுள்ள Blue Moon சந்திர கிரகணம்!
|
|