நாஸாவின் நீல நிற ராட்சசன் கண்டுபிடிப்பு!

Saturday, April 7th, 2018

பூமியில் இருந்து மிகநீண்ட தூரத்தில் இருக்கும் நட்சத்திரம் ஒன்றை நாஸா கண்டுபிடித்துள்ளது.

நாஸா நிறுவனம் விண்வெளி பற்றி தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் நிலையில் தற்போது பூமியில் இருந்து 13.4 பில்லியன் ஆண்டுகள் தொலைவில், இவ் நட்சத்திரம் உள்ளதாகதெரிவித்துள்ளது. இந்த நட்சத்திரத்தை நாஸா அனுப்பிய தி ஹப்பிள் ஸ்பேஸ் டெலிஸ்கோப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.

மேலும் இந்த நட்சத்திரமானது நீல நிறத்தில் காணப்படுவதாகவும், இதன் வயது 9 பில்லியன் வருடங்களுக்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இந்த நட்சத்திரம் பூமியை விட பெரியதாக காணப்பட்டாலும், இதன் குடும்பத்தாரில் வேறு கோள்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்தொடர்ந்து நாஸா ஆராய்ச்சி செய்து வருகின்றது. இதனை நீல நிற ராட்சசன் என நாஸா தெரிவித்துள்ளது.

Related posts: