பார்வையற்றவர்களுக்கான நாணயத்தாள் அறிமுகம்!
Thursday, September 1st, 2016
அவுஸ்திரேலியாவில் பார்வையற்றவர்கள் எளிதில் உபயோகப்படுத்தும் வகையில் நாணயத் தாழ்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
சிட்னியைச் சேர்ந்த கனார் மெக்லெட்(15) என்ற பார்வையற்ற சிறுவன் சமீபத்தில் இணையத்தில் மனு ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.
அதில் பார்வையற்றோர்கள் தொட்டு உணரக்கூடிய வகையில் வங்கி நோட்டுகள் வேண்டும் என குறிப்பிட்டிருந்தான், இதற்கு 56 ஆயிரம் பேர் தங்களது ஆதரவுகளை தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாகவே மதிப்பு உயர்த்தப்பட்ட அளவில், இரண்டு புள்ளிகளை உடைய புதிய ஐந்து டொலர் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து எதிர்காலத்தில் பிற டொலர் நோட்டுகளில் அதை புரிந்துக் கொள்ளத்தக்க வெவ்வேறு எண்ணிக்கையில் புள்ளிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts:
அதிர்ச்சி தரும் நிலவின் மறுபக்கம்!
iOS டூ Android? முதலில் இதனை தெரிந்துகொள்ளுங்கள்!
51 ஆண்டுகளுக்கு முன் மாயமான நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு!
|
|
|


