பழங்கால ஹீப்ரூ ஓலையை திறக்காமலே அதன் தகவல்களை படித்த ஆராய்ச்சியாளர்கள்!

Thursday, September 22nd, 2016

பைபிளின் `பழைய ஏற்பாடு` புத்தகங்ளில் , இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலே மிகப் பழமையான வாசகங்கள் அடங்கிய ஹீப்ரூ ஓலை ஒன்றை படிக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்தியுள்ளனர்.

பிரித்து படிக்க அது வலுவற்ற நிலையில் இருந்துள்ளது.

`சையன்ஸ் அட்வான்சஸ்` என்ற இதழில் ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

1970ல் கண்டுபிடிக்கப்பட்ட எயின்-கெடி ஓலைச் சுற்றில், லெவிட்கஸ் புத்தகத்தில் இருந்து சில வரிகள் இடம்பெற்றிருந்தன.இந்த ஓலை, குறந்தது, மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டை சேர்ந்தது.

எக்ஸ்ரே ஸ்கேனின் முப்பரிமாண டிஜிட்டல் ஆய்வு மூலம் ஆராய்ச்சியாளர்கள் இதனை படித்துள்ளனர்.

பழங்கால ஆவணத்தை நேரிடையாக திறக்காமல் அதனை அவர்கள் படித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

`டெட் சீ` ஓலைகள் உட்பட மற்ற பழங்கால தோற்சுருள்களை பற்றி படிக்க இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

_91335451_4b82a24c-92d1-4f23-bf77-40affac73332

_91335453_4bc661ba-1522-4f16-802b-211443e9cca3

Related posts: