உலகின் மிகப்பெரிய நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் விமானம் கண்டுபிடிப்பு!

Thursday, December 28th, 2017

சீனா முதல் முறையாக நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானத்தை வெற்றிகரமாக சோதனைசெய்துள்ளது.

சீன அரசுக்கு சொந்தமான விமான தயாரிப்பு நிறுவனமான விமான தொழில்துறை கழகம் இந்த விமானத்தைவடிவமைத்துள்ளது. இதனைத் தயாரிக்க எட்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஏஜி 600 ரக விமானத்திற்கு ‘குன்லாங்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் சோதனை ஓட்டமானதுகுயாங்டங்க் மாகாணத்தின் ஜூகாயில் உள்ள ஜின்வான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட குன்லாங் விமானம்சுமார் ஒரு மணி நேரம் பறந்து வெற்றிகரமாக தரையிறங்கியது. அந்த விமானத்தின் சோதனை ஓட்டம் சீனாவின் அரசுதொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

இது 37 மீட்டர் நீளம் கொண்டது. அதன் சிறகுகள் 38.8 மீட்டர் நீளமானவை. இதில் 4 இன்ஜின்கள்பொருத்தப்பட்டுள்ளன. இதுவே நீரிலும் நிலத்திலும் தரையிறங்கக் கூடிய மிகப்பெரிய விமானமாகும். இந்த விமானம்கடலில் மீட்பு பணியிலும் காட்டுத்தீ அணைப்பதற்கும் கடலோர கண்காணிப்பு பணிக்கும் பயன்படுத்தப்படும்.

இந்த விமானத்தில் சுமார் 50 பேர் பயணம் செய்யக் கூடியதும் 20 நொடியில் 12 டன் தண்ணீரை பீய்ச்சி அடித்துகாட்டுத்தீயை அணைக்கவும் ஒரே நேரத்தில் 370 டன் தண்ணீரை கொண்டு செல்லவும் முடியும். இதனை வாங்கஏற்கனவே 12 நாடுகள் முன்பதிவு செய்துள்ளன.

Related posts: