பல ஆண்டுகளுக்குமுன் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் மூளை என்று விஞ்ஞானிகள் உறுதி!

Friday, October 28th, 2016

இங்கிலாந்தில் 10 ஆண்டுகளுக்கும் முன்னர் தெற்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பழுப்பு கூழாங்கல் போன்ற தோற்றம் கொண்ட பொருள், கல்லாகிப் போன டைனோசர் மூளை என்பதற்கான முதல் தெரிந்த எடுத்துக்காட்டு என்று பிரிட்டனில் உள்ள ஆராய்ச்சியாளார்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த மூளை, குறிப்பிடத்தக்க அளவு நல்ல நிலையில் இருந்தது. ஏனென்றால், டைனோசர் இறந்த போது அதன் தலை, சதுப்பு நிலத்தை போல உயர் அமிலத்தன்மை மற்றும் குறைந்த அளவிலான பிராண வாயு அடங்கிய தண்ணீரில் மூழ்கி இருந்ததே காரணம்.

இந்த மூளை இக்வானோடனை போன்ற மிகப்பெரிய தாவர உணவுகளை உண்ணும் விலங்கினுடையதாக இருக்கலாம் என்றும், இது சுமார் 130 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சசெக்ஸில் புதைபடிவங்களை தேடுபவர் ஒருவர் இந்த மூளையை கண்டுபிடித்தார்.இது தற்கால பறவைகள் மற்றும் முதலைகளின் மூளைகளுடன் ஒப்பிடுகையில் சில ஒற்றுமைகளை கொண்டுள்ளது

_92123929_4b4e4bd3-8ee5-4fb1-88a5-be565c7a8659

Related posts: