குழந்தைகளுக்கு பெயர் சூட்டி ரூ.92 லட்சம் வருமானம் ஈட்டிய 16 சிறுமி!

Tuesday, September 13th, 2016

பிரித்தானிய நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் குழந்தைகளுக்கு பெயர்களை சூட்டுவதன் மூலம் இதுவரை ரூ.92 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள Gloucestershire நகரில் Beau Jessup என்ற 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது பெற்றோருடன் சீனாவுக்கு அவர் சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது, சீனா நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தைக்கு ஆங்கில பெயர் ஒன்றை சூட்டுமாரு சிறுமியை கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தைக்கு பெயர் சூட்டியதும் அதற்கு தாய் சிறிய அளவிலான தொகையை அளித்துள்ளார்.

வருமானம் ஈட்டுவதற்கு இப்படியும் ஒரு வழி இருப்பதை உணர்ந்த சிறுமி இங்கிலாந்து திரும்பியதும் ஒரு புதிய இணையத்தளத்தை தொடங்கியுள்ளார். பின்னர், ‘இந்த இணையத்தளத்தில் சீனாவை சேர்ந்த குழந்தைகளுக்கு ஆங்கில பெயர் தெரிவு செய்யப்படும்’ என விளம்பரம் அளித்துள்ளார்.

சீனா குடிமக்களில் பலருக்கும் தங்களது குழந்தைகளுக்கு ஆங்கில பெயர்களை சூட்டுவதில் ஆர்வம் அதிகம். ஏனெனில், ஆங்கில பெயர்களை சூட்டுவதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் இங்கிலாந்தில் கல்வி பயில எளிமையாக இருக்கும் என சீனா மக்கள் கருதுகின்றனர்.

மேலும், குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்போது அக்குழந்தையின் 12 ஆளுமை பண்புகளில் 5 குணாதிசயங்களை தெரிவு செய்து அவற்றின் அடிப்படையில் ஆங்கில பெயரை சூட்ட வேண்டும்.

இதே வழிமுறையை தான் இந்த 16 வயது சிறுமியும் செய்து வருகிறார். குழந்தையின் குணாதிசயங்களுக்கு ஏற்ப 3 பெயர்களை தெரிவு செய்து பெற்றோருக்கு அனுப்பி வைப்பார். இந்த 3 பெயர்களில் அவர்கள் இறுதியாக ஒரு பெயரை தெரிவு செய்து தங்களது குழந்தைக்கு சூட்டுவார்கள். இதன் மூலம் சிறுமிக்கு வருமானமும் கிடைக்கிறது.

இதுவரை சிறுமி 2 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ளார். இதன் மூலம் 48,000 பவுண்ட்(92,65,114 இலங்கை ரூபாய்) வருமானம் ஈட்டியுள்ளார். சீனாவில் பல இணையத்தளங்கள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் இணையத்தளம் மூலம் விரும்பும் ஆங்கில பெயர்களை சூட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: