நூறு மில்லியன் மடங்கு வேகத்தில் புதிய லேப்டாப்!

Friday, March 11th, 2016
Google நிறுவனம் Quantum தொழில்நுட்பத்தினைக் கொண்ட கணனிகளை வடிவமைக்கும் திட்டம் தொடர்பாக ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் நாசா விண்வெளி ஆய்வு நிலையத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டம் தொடர்பாக தற்போது மேலும் சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி இவை சாதாரண Laptop ஐ விடவும் 100 மில்லியன் மடங்கு வேகம் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Quantum தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் முதலாவது கணினி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை Microsoft நிறுவனம் தெரிவித்த கருத்து ஒன்றில் “நாம் அனைவரும் எதிர்வரும் 10 ஆண்டுகளில் Quantum கணினிகளிலேயே பணிபுரிவோம்” என்று குறிப்பிட்டிருந்தமை தெரிந்ததே.

Related posts: