எச்சரிக்கை! புதியவகை வைரஸ் பரவும் அபாயம்!

Thursday, June 30th, 2016

இலங்கைத் தீவு முழுவதும் புதிய வகையான வைரஸ் நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

டெங்கு தொற்று நிலைமையுடன் இன்ஃபுளுவென்சா AH1N1 மற்றும் வைரஸ் காய்ச்சல் நிலைமை ஒன்று நாடு பூராகவும் பரவ ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் காய்ச்சல் என சந்தேகித்து நோயாளி உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய தவறின் டெங்கு நோய் அதிகரித்து உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

கடுமையான காய்ச்சல், தசை வலி, கடுமையான தலைவலி, வாந்தி போன்ற டெங்கு நோயின் அறிகுறிகள் காணப்பட்டல் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த டெங்கு காய்ச்சல் அறி குறித்து சமமானதாகவே இந்த இன்ஃபுளுவென்சா AH1N1 மற்றும் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளும் காணப்படும் என வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது வரையில் 21,000 டெங்கு நோயாளிகள் இனங்கானப்பட்டுள்ளதாகவும், 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.

இந்த நிலைமை மேலும் அதிகரிக்க கூடும் எனவும், டெங்கு நோய் தொற்று எதிர்வரும் மாதம் இறுதி வரை அவதானம் காணப்படுவதாகவும் வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: