நாசா விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
Sunday, April 2nd, 2017
ஒரு நொடியினை பில்லியனால் வகுத்தால் எந்த எண்ணானது கிடைக்குமோ அந்த நேரத்தைக் கூட அளவிடும் நுண்ணிய கடிகாரத்தினை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மேரிலாண்ட், கீரீன் பெல்ட்டில் உள்ள நாசா ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் இதற்கான சோதனையினை அங்கு மேற்கொண்டு வருகின்றனர்.
லேசர் பீம்களுடன் இணைக்கப்பட்டு, விண்கலத்துக்கும் கோள்களின் தரைப்பரப்புக்கு இடையேயான தொலைவினை கண்டறிய இது உதவும். மேலும், ஒளியின் வேகத்தில் நகரும் பொருளின் வேகத்தினை அறியவும், பூமியின் மேற்பரப்பில் சுமார் 500 அடி தூரத்தில் உள்ள பனிப்பாறைகள் மற்றும் பாறைகள் ஆகியவற்றின் உயரத்தினை கூட துல்லியமாக அறிய இயலும்.
விண்வெளி ஆராய்ச்சிக்காக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இந்த கடிகாரம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
கூகுளில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் பெண்களே: ஆய்வில் தகவல்!
நிலவில் வேற்று கிரகவாசிகள் ஆக்கிரமிப்பு?
மலேரியா கிருமியை கொல்லக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு !
|
|
|


