நடுவானில் வெடித்து சிதறிய ‘ஃபயர் ஃபிளை’ விண்ணுக்கு ஏவிய முதல் ரொக்கெட்!
Saturday, September 4th, 2021
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஃபயர் ஃபிளை’ விண்ணுக்கு ஏவிய முதல் ரொக்கெட் நடு வானில் வெடித்துச் சிதறியது என விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ருவிட்டரில் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள வன்டன்பெர்க் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து ‘ஆல்பா’ என்ற ரொக்கெட், விண்ணுக்கு ஏவப்பட்டு 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் வெடித்து சிதறியுள்ளது.
DAMIKA 01 கலிபோர்னியா கடல் பகுதியில் பசுப்பிக் பெருங்கடலுக்கு மேலான வான்பரப்பில் இந்த ரொக்கெட் வெடித்து சிதறியதாக விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விண்ணுக்கு ஏவப்பட்டு சிறிது நேரத்தில் ரொக்கெட் முதல் சுற்றுப்பாதையை அடைய முயன்றபோது அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது வெடித்துச் சிதறியுள்ளது எ னவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய வம்சாவளியினரை கண்டு வியக்கிறேன்- நன்றி சொன்ன டிரம்ப்!
சிகிச்சைக்கு கணவன் மறுப்பு - தற்கொலை செய்த கர்ப்பிணி பெண்!
விண்வெளிக்கு சென்ற பூனைக்கு சிலை!
|
|
|


