தொலை நோக்கியில் பதிவான ஏலியன் கிரகங்கள்!

Friday, May 13th, 2016

விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் ஏலியன் எனப்படும் வேற்றுகரக வாச தேடலில் புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சமீபத்தில் வெளியான ஆய்வுகளில் பூமியை போன்ற வாழும் சூழல் கொண்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

டிராப்பிஸ்ட்-1 பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் வியாழன் அளவு இருக்கும் பொருள் ஆகும். அவ்வளவு எளிதாக கண்களில் தெரியாத டிராப்பிஸ்ட்-1 வெப்பம் 2,400º செல்ஷியஸ் ஆகும்.

பூமியை பொருத்த இது அதிகப்படியான எனலாம், ஆனால் நட்சத்திர தரத்தை பொருத்த வரை இது மிகவும் குளுமையான ஒன்று என குறிப்பிடப்படுகின்றது.

மூன்று கிரகங்கள் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி டிராப்பிஸ்ட்-1 வட்டப்பாதையில் மொத்தம் மூன்று கிரகங்கள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

சூழ்நிலை இந்த கிரகங்களின் சூழ்நிலையானது பூமியை போன்ற வாழ்க்கையை அனுமதிப்பதோடு பூமியை போன்றே அங்கும் வாழ்க்கை இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Related posts: