வெப்பநிலை அதிகரிப்பால் மீன்களில் பாதரசத்தின் அளவு உயரலாம் : ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!

Sunday, January 29th, 2017

அதிகரித்து வரும் வெப்பநிலையானது மீன்களில் உள்ள பாதரசத்தின் அளவை தற்போதய அளவைவிட ஏழு மடங்கு அதிகரிக்கச் செய்யலாம் என்று சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்பமயமாதல் கடல் உயிரினங்களில் நச்சுத்தன்மையை அதிகரிப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.கூடுதலாக பெய்யும் மழை கடலுக்குள் செல்லும் கரிம பொருட்களை கொண்டு சேர்த்துள்ளதை பல பரிசோதனைகளின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனால் உணவு சங்கிலியில் மாற்றம் ஏற்பட்டு உயிரினங்களுக்கு மேலும் ஓர் அடுக்கை உருவாக்க அது பாதரசத்தின் செறிவை உயர்த்துகிறது.சைன்ஸ் அட்வான்சஸ் என்ற நாளிதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

உலகிலே மிகவும் மோசமான நச்சு உலோகங்களில் ஒன்றாக பாதரசம் கருதப்படுகிறது. பொது சுகாரத்திற்கு மிகப்பெரிய பத்து அச்சுறுத்தல்களில் பாதரசமும் ஒன்று என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக அளவிலான பாதரசம் நரம்பு மண்டலம் அமைப்புகளை சேதமாக்கவும், குழந்தைகளுக்கு பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சினைகள் ஏற்படுவதிலும் தொடர்புபடுத்தப்படுகிறது.

_93851251_472c94bf-0cbf-4ecb-853b-915c61f9e303

பாதரசம் வெளிப்பாட்டின் பொதுவான வடிவமானது மெத்தைல்மெர்குரி அடங்கிய மீன்களை உட்கொள்வது.

பாதரசத்தின் ரசாயன வடிவம்தான் மெத்தைல்மெர்குரி. நீர், நிலம் அல்லது செடிகளில் உள்ள பாதரசத்துடன் பாக்டீரியா சேரும் போது மெத்தைல்மெர்குரி உருவாகிறது.தொழில்துறையில் புரட்சி ஏற்பட்டதிலிருந்து உலகின் சுற்றுச்சூழல்களில் பாதரசத்தின் அளவானது சுமார் 200 முதல் 500 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

_93851252_ed960f2c-600a-41d7-a8ef-2e0607a28908

சமீப ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்குள் நுழையும் பாதரசத்தை ஒருங்கிணைந்த முயற்சிகள் மினமாட்டா மாநாடு எனப்படும் சர்வதேச ஒப்பந்தம் மூலம் கடுப்படுத்தப்பட்டுள்ளது.136 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. 2013 ஆம் ஆண்டிலிருந்து இது அமலில் உள்ளது.ஆனால், இந்த புதிய ஆய்வானது, பருவ நிலை மாற்றமானது மெத்தைல் மெர்குரியின் அளவுகளை முன்பைவிட அதிகளவு அதிகரிக்கும் என்று வலியுறுத்தியுள்ளது.

Related posts: