தூக்கம் குறைந்தால் முகக் கவர்ச்சியும் வசீகரமும் குறையும்!

Saturday, May 20th, 2017

தூக்கம் குறைந்தால் உடல் நலக்குறைவு ஏற்படும். வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முகக் கவர்ச்சியும் வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சுவீடனின் கரோலின்சா நிறுவனம் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழக நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 7½ மணி நேரம் அயர்ந்து தூங்கும்படி வலியுறுத்தினர். அதன் பின்னர் முக அழகை புகைப்படம் எடுத்தனர்.அவற்றில் குறைந்த நேரம் தூங்கியவர்களின் முகங்கள் பொலிவிழந்து, கவர்ச்சியின்றிக் காணப்பட்டன.இதன் மூலம் முகம் கவர்ச்சியுடன் திகழ அதிக நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts: