திரைகளை உருவாக்கக்கூடிய புதிய பளிங்கு திரவம் கண்டுபிடிப்பு!

Friday, February 3rd, 2017

 

நவீன் கணினித் திரைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் LCD, LED தொழில்நுட்பங்ளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் LCD எனப்படும் தொழில்நுட்பத்தில் இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்டு வந்த பளிங்கு திரவத்தினை விடவும் மற்றுமொரு சிறந்த மாற்றீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப் புதிய திரவமானது முன்னைய திரவித்தினை விடவும் மூன்று மடங்கு துல்லியம் வாய்ந்த திரைகளை உருவாக்க பயன்படக்கூடியது.Central Florida பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதன் மூலம் உருவாக்கப்படும் திரைகள் மிகவும் குறைந்த மின்சக்தியையே பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என கூறியுள்ளனர்.

தற்போது உள்ள திரைகளில் ஆப்பிளின் Retina திரைகள் மட்டுமே ஒரு அங்குலத்திற்கு 500 பிக்சல்களைக் கொண்ட அதி உயர் வினைத்திறன் வாய்ந்த திரைகளாகக் காணப்படுகின்றன.

ஆனால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பளிங்கு திரவத்தினைப் பயன்படுத்தி ஒரு அங்குலத்தில் 1,500 பிக்சல்கள் கொண்ட திரைகளை உருவாக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றுக்கு மேலாக வீண் விரையமாகும் சக்தியை 40 சதவீதத்தினால் குறைக்க முடியும் என்பதுவும் விசேட அம்சமாகும்.

18-18-1transparent-screen

Related posts: