உலகின் கடைசி ஆண் காண்டாமிருகம் மரணம் !

Friday, March 23rd, 2018

கென்யாவில் வன சரனாலயத்தில் லைகிபியா வன சரணாலயத்தில் உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகமான சூடான் முதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்தது

அழிந்த வெள்ளைக் காண்டாமிருகத்தின் கடைசி ஆண் காண்டாமிருகம் கென்யாவில் லைகிபியா வன சரணாலயத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டது 45 வயதான அந்தக் காண்டாமிருகம் முதிர்ச்சியின் காரணமாக நோய் வாய்ப்பட்டது அதைக் காப்பாற்ற உலகிலுள்ள கால்நடை வைத்தியர்கள் மற்றம் விஞ்ஞானிள் தீவிர முயற்சி மேற் கொண்டனர்

ஆனால் அந்தக் காண்டாமிருகம் நேற்று பரிதாபமாக இறந்தது சூடான் எனப் பெயர்கொண்ட அந்தக் காண்டாமிருகம் கடந்த 1973 ஆம் ஆண்டு தெற்கு சூடானில் உள்ள ~hம்பே வன சரணாலயத்தில் பிறந்தது அந்தக் காண்டாமிருகம் பிறந்த போது மொத்தம் 700 வெள்ளை காண்டாமிருகங்கள் இருந்தன தற்போது அவை கொன்று அழிக்கப்பட்டு விட்டன

தற்போது வெள்ளை காண்டாமிருகம் சூடான் இறந்ததைத் தெடர்ந்து உலகின் 2 பெண் வெள்ளை காண்டாமிருகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன இறந்த மிருகத்தின் உயிரனுக்களை விஞ்ஞானிகள் சேகரித்து பாதுகாத்து வருகின்றனர் அதன் மூலம் உயிருடன் இருக்கும் பெண் வெள்ளை காண்டாமிருகங்களுக்கு செயற்கைக் கருவூட்டல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது அதன் மூலம் அழிவிலிருந்து வெள்ளைக் காண்டா மிருகத்தை பாதுகாக்க முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

Related posts: