தமிழ் உள்ளிட்ட 7 இந்திய மொழிகளுக்கு கூகுளில் ஆஃப்லைனிலும் மொழிபெயர்க்கும் வசதி!

Friday, September 15th, 2017

கூகுள் டிரான்ஸ்லேட் ஆஃப்லைன் (Google Translate Offline) பதிப்பில் தமிழ் உட்பட ஏழு இந்திய மொழிகளைப் பயன்படுத்தும் வசதி புதிதாய் இணைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வசதியைக்கொண்டு ஆஃப்லைனிலும் (Offline) ஏழு மொழிகளைப் பயனாளர்கள் மொழிபெயர்ப்பு செய்ய முடியும்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, குஜராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மற்றும் வங்காள மொழிகளுக்கு Conversation Mode சேர்க்கப்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்தி பயனாளர்கள் செயலியுடன் பேசி மொழி மாற்றத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.புதிய Conversation Mode – இனை Activate செய்ய பயனாளர்கள் மைக் பட்டனை கிளிக் செய்து தங்களுக்குத் தேவையான மொழியைத் தெரிவு செய்ய வேண்டும்.

கூகுள் டிரான்ஸ்லேட் செயலி தானாக பயனாளர்கள் பேசும் மொழியை அறிந்து கொண்டு, சீரான உரையாடல் அனுபவத்தை வழங்கும்.புதிய வசதியைப்பெற பயனாளர்கள் மொழிகளை முதலில் டவுன்லோட் செய்ய வேண்டும்.ஆஃப்லைன் வசதியைக்கொண்டு குறிப்பிட்ட வார்த்தை அல்லது வாக்கியத்தை இண்டர்நெட் உதவியின்றி மொழிமாற்றம் செய்ய முடியும்.

 

Related posts: