ஜி-மெயில் ஊடாக பணம் அனுப்பலாம்: கூகுளின் அடுத்த பரிணாமம்!

Thursday, March 16th, 2017

நவீன இணைய உலகில் பல வசதிகளையும், சேவைகளையும் வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது தற்போது தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஊடாக பணம் அனுப்பும் வசதியினையும் வழங்குகின்றது.

இவ்வசதியினை அன்ரோயிட் சாதனங்களில் உள்ள ஜிமெயில் அப்பிளிக்கேஷன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். எனினும் அப்பிளிக்கேஷன் தவிர்ந்த ஏனைய முறைகளில் இவ்வசதி கிடைக்கப்பெறாது. அதாவது இணைய உலாவிகளின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் முதன் முறையாக அமெரிக்காவில் மட்மே இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் எனைய நாடுகளுக்கும் விஸ்தரிப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் வசதியானது இலகுவானதும், விரைவானதுமானதுமாக இருப்பதுடன் நம்பிக்கை மிகுந்ததாகவும் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: