சூரிய மின்சக்தி சேமிப்பை அதிகரிக்கும் புதிய தொழில்நுட்பம்!

உலக நாடுகளில் மின்சார உற்பத்தியில் சோலார் தொழில்நுட்பமானது முக்கிய இடத்தைப் பெற்றுவருகின்றது.இதன் காரணமாக இத் தொழில்நுட்பத்தினை மேம்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இம் முயற்சியின் பயனாக சூரியமின் சக்தியை தற்போது சேமிக்கும் திறனை விடவும் 3,000 சதவீதம் அதிகமாக சேமிக்கக்கூடிய தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இதற்காக புதிய வகை கிரபீனைக் கொண்டு (Graphene) மின்வாய் உருவாக்கப்பட்டுள்ளது.
இத் தொழில்நுட்பமானது நேரடியாக சோலார் கலங்களுடனேயே இணைக்கக்கூடிய வகையில் நெகிழ்ச்சித் தன்மை கொண்டது.
மேலும் விரைவான சேமிப்பு செயற்பாட்டிற்காக வினைத்திறன் வாய்ந்த மின்கொள்ளளவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.இந்த அபார தொழில்நுட்பத்தினை அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் உள்ள RMIT பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவே கண்டுபிடித்துள்ளது
Related posts:
பிரித்தானியா விலகிச்செல்லும் : முற்கூட்டியே கணித்த அபூர்வ சோதிடர்!
1100 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்திற்கு வேற்று கிரகவாசிகள்!
விஞ்ஞானிகளின் மிகப்பெரும் தவறு - அழிவை நோக்கி உலகம்!
|
|