சீன விண்கலத்தால் மனிதர்களுக்கு  ஆபத்தா?

Monday, April 2nd, 2018

சீனாவின் முதலாவது விண்வெளி நிலையமான Tiangong-1 ஆனது கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கின்றது.

இதன்படி இவ் வார இறுதிக்குள் பூமியில் விழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் எந்த இடத்தில் விழும் என்பது தொடர்பாக துல்லியமான தகவல்கள் எதனையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.இந்நிலையில் தரையில் மோதும் குறித்த விண்வெளி நிலையம் மனிதர்களில் மோதுவதற்கான சாத்தியம் மில்லியனில் ஒரு சந்தர்ப்பமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இன்றிலிருந்து எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் 43 டிகிரி வடக்கு மற்றும் 43 டிகிரி தெற்கு அகலாங்கினுள் விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை 8.5 தொன் எடை கொண்ட இந்த விண்வெளி நிலையமானது 10 மீற்றர்கள் நீளமும், 3.3 மீற்றர்கள் அகலமும் உடையதாகும்.

Related posts: