சீனா விஞ்ஞானிகளால் குளோனிங் குரங்குகள் உருவாக்கம்!

Sunday, January 28th, 2018

சீனா விஞ்ஞானிகளால் குளோனிங் முறையில் இரண்டு குரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களுக்கு முன் குளோனிங் முறையில் செம்மறி ஆடு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சீனா விஞ்ஞானிகளின் முயற்சியால்இரண்டு குரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் குளோனிங் முறையின் வளர்ச்சிக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

உயர் விலங்குகளின் வரிசையில் உருவாக்கப்பட்ட அதாவது மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட முதலாவது உயிரினம் இதுவாகும். கடந்த 6வாரங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட இவ்விரண்டு குளோனிங் குரங்குகளுக்கும் ஷாங் ஷாங் மற்றும் ஹீயா ஹீயா என சீனா விஞ்ஞானிகள்பெயரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மனிதர்களை குளோனிங் முறையில் உருவாக்குவது கடினமான செயல் ஆனால் குரங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கி வெற்றிபெற்றுள்ளமை மனிதர்களை குளோனிங் முறையில் உருவாக்குவதற்கான ஆரம்பம் எனவும் சீனா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

pic

Related posts: