சிறிது காலத்தில் சனிக் கிரகம் போல் பூமியும் மாறும் – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

Sunday, November 20th, 2016

இன்னும் சிறிது காலத்தில் பூமியை சுற்றி, சனிக் கிரகத்தில் இருப்பது போன்ற வலயம் ஏற்படும் என விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பூமியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் தகவல் தொடர்பு செய்மதிகள் மற்றும் விண்வெளி ஓடங்களின் பாகங்கள் இவ்வாறு வலயமாக தென்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பூமிக்கு மேல் விண்வெளியில் செய்மதிகளின் 100 மில்லியன் பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன. இவர்களில் பல கண்ணாடி போத்தல்களை விட பெரியவை என நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.அவற்றில் 27 ஆயிரம் பாகங்கள் 10 சென்றி மீற்றரை விட பெரியவை என கருதப்படுகிறது. இந்த பாகங்கள் மணிக்கு 28 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் பூமியை சுற்றி வருகின்றன.

இந்த செய்மதி பாகங்கள் காரணமாக எதிர்காலத்தில் விண்கலங்களை சேதமின்றி விண்வெளிக்கு அனுப்புவது தொடர்பில் பிரச்சினையான நிலைமை ஏற்படும் என சதம்ப்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1953 ஆம் ஆண்டு ஸ்புடினிக் என்ற செய்மதி விண்ணுக்கு அனுப்பப்பட்ட நாளில் இதுவரை விண்வெளி ஓடங்கள், ரொக்கட்டுகள், செய்மதிகள் ஆயிரக்கணிக்கில் பூமியில் இருந்து விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவை காலம் கடந்ததும் பழுதாகி அழிந்து அவற்றின் பாகங்கள் விண்வெளியில் இருக்கின்றன.இந்த நிலையில், விண்வெளியில் இருக்கும் பாகங்களை எப்படியாவது அப்புறப்படுத்துவது குறித்து விஞ்ஞானிகள் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.

Courtesy : Youtube

Related posts: