இலங்கையிலுள்ள வாட்சப் பயனாளிகளுக்கு ஓர் முக்கிய தகவல்!

Friday, February 26th, 2021

வாட்சப் தொடர்பில் பல்வேறு புதிய தொழில்நுட்ப பிரச்சனைகள் சர்ச்சையாக காணப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை வாட்ஸ்அப் பயனாளர்கள் ஆயிரக்கணக்கானோரின் கணக்குகள் முடக்கப்படும் ஆபத்துக்கள் உள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிவித்துள்ளது .

இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையின் தொகுப்பையும் மே 15 ஆம் திகதிக்குள் ஏற்றுக்கொள்ளாத அனைத்து வாட்ஸ்அப் பயனர்களும் இனிமேல் குறுந்தகவல் பெறவோ அல்லது செய்திகளை அனுப்பவோ முடியாதென என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

புதிய விதிமுறைகளையும் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளாத பயனர்களுக்கு தற்காலிகமாக வரையறுக்கப்பட்ட நேர அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளை மாத்திரமே வழங்கப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் 120 நாட்களுக்குப் பிறகு செயலற்ற கணக்குகள் நீக்கப்படும் என்று இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையின் தொகுப்பை ஏற்காத வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் செயலற்ற கணக்குகள் என்று பட்டியலிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: