சிங்கங்களுக்கு சிறை !
Friday, June 17th, 2016
மேற்கு இந்தியாவில் பல மனிதர்களைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்படும் மூன்று சிங்கங்கள் இனி தங்கள் வாழ்நாள் முழுவதும் ‘சிறை’வாசம் அனுபவிக்க உள்ளன.
ஒரு ஆண் சிங்கமும், இரு பெண் சிங்கங்களும் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வன விலங்கு சரணாலயத்தின் வாழும் சிங்கக்குழு ஒன்றைச் சேர்ந்தவை.
ஆனால், கடந்த சில மாதங்களில் நடந்த வெவ்வேறு தாக்குதல்களில் ஒரு சிறுவன் உட்பட மூன்று உள்ளூர் வாசிகள் உயிரிழந்தனர்.
இந்த மூவரும் ஆண் சிங்கத்தால் கொல்லப்பட்டிருந்தாலும், பெண் சிங்கங்களும் இந்த உடல்களை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆண் சிங்கமானது மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பப்பட உள்ளது. இரு பெண் சிங்கங்களும் மீட்பு மையம் ஒன்றில் ‘சிறை’ வைக்கப்பட உள்ளன.


Related posts:
Google Chrome இயங்க மறுக்கிறதா?
பூமியை நெருங்கும் மிகப்பெரிய விண்கல்!
செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையை அறிய நாசா முயற்சி!
|
|
|


