செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையை அறிய நாசா முயற்சி!

Monday, May 7th, 2018

ஆறு வருடங்களுக்கு முன்னர் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் செவ்வாய் கிரகம் நோக்கிய கியூரியோசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இவ் விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சிறிய அளவிற்கு துளையிட்டு ஆய்வு செய்யும் ஆற்றலைக் கொண்டிருந்தது.

ஆனால் தற்போது மேலும் ஆழமாக துளையிட்டு செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையை துல்லியமாக அறிவதற்கு புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி இம் மாதம் 5ம் திகதி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படவுள்ள InSight விண்கலத்தில் ஜியோலாஜிஸ்ட் ரோபோ ஒன்றினை அனுப்பவுள்ளனர்.

இந்த ரோபோ கிரகத்தின் ஆழமான பகுதியிலும் பயணிக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளதாக நாசா விஞ்ஞானியான ப்ரூஸ் பேர்னாட் தெரிவித்துள்ளார்.

Related posts: