சாலையை கடக்க முற்பட்ட சேவல் அதிரடி கைது!
Sunday, October 16th, 2016
பிரித்தானியாவில் பரபரப்பான சாலையை கடக்க முற்பட்ட குற்றத்திற்காக கோழி ஒன்றை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின். Dundee பகுதியில் உள்ள East Marketgait சாலையை கடக்க முற்பட்ட குற்றதிற்காகவே கோழி கைது செய்யப்பட்டுள்ளது. கோழியால் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார். கோழியை கைது செய்து அருகில் உள்ள Tayside காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், விலங்குகள் வதைத் தடுப்பு அமைப்பினர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, உரிமையாளர் கிடைக்கும் வரை கோழியை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் படி கோரியுள்ளனர். எனினும், கோழி எதற்காக சாலையை கடக்க முற்பட்டது மற்றும் உரிமையாளர் குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
பழங்கால ஹீப்ரூ ஓலையை திறக்காமலே அதன் தகவல்களை படித்த ஆராய்ச்சியாளர்கள்!
விண்வெளிக்கு சென்ற பூனைக்கு சிலை!
நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த 'இஸ்ரோ'!
|
|
|


