சமீபத்தில் சீனாவில் திறக்கப்பட்ட கண்ணாடி தள பாலம் மூடப்பட்டது!

Saturday, September 3rd, 2016

கடந்த மாதம் சீனாவில் திறக்கப்பட்ட உலகிலேயே மிக நீளமான கண்ணாடி தள பாலம், தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு முறை 800 பேர் மட்டுமே செல்லக்கூடிய இந்த கண்ணாடி பாலத்தை கடந்து செல்ல அதிக பார்வையாளர்கள் விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றர்.

400 மீட்டருக்கும் அதிகமான நீளத்தில், ஒரு செங்குத்து பள்ளதாக்கிற்கு உயரே இது ஹூனான் மாகாணத்தின் ட்சாங்ஜியாஜியேயில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கண்ணாடி பாலம் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.

160903071819_china_glass_bridge_640x360_reuters

Related posts: