கொலம்பியாவில் இரத்தக் கண்ணீர் வடிக்கும் கன்னி மரியாளின்!
Wednesday, May 25th, 2016
கொலம்பிய புளோரிடா பிளாங்கா நகரிலுள்ள கன்னி மரியாளின் உருவச்சிலையிலிருந்து கண்ணீராக குருதி வழிந்து வருவதாகத் தகவல் பரவியதையடுத்து அந்நகருக்கு பெருமளவு யாத்திரிகர்கள் படையெடுத்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
மேற்படி நிகழ்வை பிராந்திய மக்களில் பெரும்பாலானோர் இறை அற்புதங்களில் ஒன்றாகக் கருதுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் அந்த நகர கத்தோலிக்க தேவாலயம் விமர்சனம் எதனையும் வெளியிடவில்லை
எனினும் மேற்படி நகருக்கு அருகிலுள்ள புகரமன்கா நகரைச் சேர்ந்த பேராயர் தெரிவிக்கையில், இந்த தகவல் குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்படக் கோரியுள்ளார்
உள்ளூர் மதபோதகரான ஜோர்ஜ் எலியசெர் கார்சியா இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், மக்களை இவ்வாறு திரண்டு வரச் செய்வது யாத்திரைகளைத் தூண்டும் முகமாகவோ அன்றி வர்த்தக நோக்கமாகவோ இருக்க வாய்ப்புள்ளதாக கூறினார்
இந்நிலையில் உள்ளூர்வாசிகள் இது உண்மையிலேயே அற்புதமா அல்லது இதற்கு விஞ்ஞான ரீதியான விளக்கம் ஏதாவது உள்ளதா என்பது குறித்து தமக்கு தெளிவுபடுத்த வேண்டும் என கத்தோலிக்க தேவாலய பிரதிநிதிகளிடம் கோரியுள்ளனர்


Related posts:
|
|
|


