கூகுளுடன் கைகோர்க்கும் பேஸ்புக்?

Wednesday, February 8th, 2017

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனமும், முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கும் விரைவில் இணைந்து பணியாற்றக் காத்திருக்கின்றன.

இன்னும் இரு மாதங்களில் பிரான்ஸ் நாட்டில் இடம்பெறவுள்ள தேர்தலின் போது போலியான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவே இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது அதிகள அளவில் போலியான தகவல்கள் மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. இதற்கு பிரதானமாக பேஸ்புக் வலைத்தளமே பயன்படுத்தப்பட்டிருந்தது. இதன் தாக்கத்தை உணர்ந்துகொண்ட பேஸ்புக் நிறுவனம் அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதை தவிர்ப்பதற்கான வசதிகளை அறிமுகம் செய்திருந்தது.

இவ்வாறான நிலையிலேயே கூகுள் நிறுவனத்துடன் இணைந்து CrosssCheck எனும் புதிய அடித்தளம் ஒன்றின் ஊடாக போலியான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க முடிவு செய்துள்ளது. CrosssCheck ஆனது இம்மாதம் 27ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Facebook-in-Goole-Plus

Related posts: