குறைந்த நேரம் உறங்கும் முலையூட்டி காட்டு யானை!

ஆபிரிக்க காட்டு யானைகள் மிகக் குறுகிய காலம் உறங்கும் முலையூட்டி விலங்கினம் என்று புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
நிலத்தில் வாழும் உலகின் மிகப்பெரிய விலங்கினமான யானையின் உறக்கம் பற்றி ஆய்வொன்றை மேற்கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் அவை நாளொன்றுக்கு சராசரியாக இரண்டு மணி நேரங்களே உறங்குவதாகவும் சில தினங்கள் உறக்கம் கொள்வதில்லை என்றும் கண்டறிந்துள்ளனர்.
பொட்ஸ்வானா சொபே தேசிய பூங்காவில் உள்ள இரு பெண் யானைகளை ஆய்வாளர்கள் 35 தினங்கள் அவதானித்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இதன்போது கைக்கடிகாரம் அளவான சாதனம் ஒன்று பாதகமற்ற முறையில் தோலின் கீழ் பொருத்தப்பட்டு துல்லியமாக அவதானிக்கப்பட்டுள்ளது.
யானைகள் சிங்கம் அல்லது மனித அச்சுறுத்தலை தவிர்க்க சில வேளைகளில் 46 மணிநேரங்கள் உறக்கம் இன்றி சுமார் 30 கிலோமீற்றர்கள் தூரம் நடக்கின்றன. அடுத்து வளர்க்கப்படும் குதிரைகளே மிக குறுகிய காலம் உறங்குவதாக நம்பப்படுகிறது. அவை நாளொன்றுக்கு மூன்று மணி நேரமே உறங்குகின்றன.
Related posts:
|
|