காரின் நிழல் சாலையில் விழுந்ததால் அபராதம் விதித்த நிர்வாகம்!

Monday, September 5th, 2016

ரஷ்யாவில் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் நிழல் குறிப்பிட்ட எல்லைக் கோட்டை தாண்டி விழுந்ததால் அந்த ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஓட்டுனர் ஒருவர் தமது காருடன் ரிங் ரோடு பகுதியில் பயணம் செய்துள்ளார்.அப்போது அவரது வாகனமானது சாலையின் நெடுகே போடப்பட்டிருந்த கோட்டின் அருகே சென்றுள்ளது. ஆனால் அந்த கோட்டை வாகனம் தாண்டவில்லை.

இருப்பினும் அவரது வாகனத்தின் நிழல் குறிப்பிட்ட கோட்டினை தாண்டியதால் அங்கு பொருத்தப்பட்டிருந்த கமெரா அதை படம் பிடித்து விதி மீறல் என்று அபராதம் விதிக்கும் படி கட்டளை அனுப்பியுள்ளது.

வாகனத்தின் நிழல் தாண்டினாலே அபராதம் விதிக்கப்படும் உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று, பாதிக்கப்பட்ட அந்த நபர் சமூகவலைதளத்தில் பதிந்துள்ளார். மட்டுமின்றி அபராத தொகையை செலுத்த வலியுறுத்தி இவருக்கு அனுப்பியுள்ள புகைப்படத்தையும் அத்துடன் இணைத்து பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில் சாலை பாதுகாப்பு பொலிசாருக்கு புகார் மனு ஒன்றை அந்த நபர் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட பொலிசார், அபராத தொகையை ஆண்டு இறுதியில் மொத்தமாக வசூலிப்பதாகவும், தற்போது நேர்ந்தவை இயந்திர பழுதால் ஏற்பட்டவை எனவும் கூறியுள்ளனர்.

இதேப்பொன்ற சம்பவம் ஒன்று இன்னொரு ஓட்டுனருக்கும் நேர்ந்துள்ளது. அவரது வாகனத்தின் முகப்பு வெளிச்சமானது எல்லைக் கோட்டினை சில முறை தாண்டியுள்ளதாம்.இச்சம்பவம் தொடர்பாக மேல்முறையீடு மேற்கொண்ட அவரது புகார் மனுவை பொலிசார் பரிசீத்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவருக்கு பொலிசார் உறுதி அளித்துள்ளனர்.

625.500.560.350.160.300.053.800.748.160.70

Related posts: