கலக்ஸி நோட் 7 தாக்கம் – சாம்ஸங் இலாபத்தில் 30 சதம் வீழ்ச்சி!
Thursday, October 27th, 2016
கலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் ஃபோன்கள் திடீரென தீப்பிடித்து வெடிப்பதாக பெருமளவில் புகார்கள் வந்ததை அடுத்து, அந்த ஃபோன்களின் உற்பத்தியை சாம்ஸங் நிறுவனம் நிறுத்தியது. இதனால் அந்நிறுவனத்தின வருவாயில் 30 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி, இரண்டு வாரங்களுக்குப் பிறகு இலாப வீழ்ச்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாம்ஸங்கின் பிரதான போட்டியாளரான ஆப்பிள் நிறுவனம், தங்களது கருவிகளின் விற்பனை மற்றும் லாபம், 2001-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக குறைந்திருப்பதாக இந்த வாரத் துவக்கத்தில் அறிவித்திருந்தது.

Related posts:
உலகில் உயரமான ஆண்கள் நெதர்லாந்தில்!
9 ஆண்டுகளுக்கு பிறகு மலர்ந்த பிரமாண்டமான பூ!
'மம்மி' செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து கண்டுபிடிப்பு!
|
|
|


