கணனி உலகில் அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சீனா

Wednesday, November 15th, 2017

கம்பியூட்டர் வகைகளில் அதி கூடிய வேகம் கொண்ட கம்பியூட்டர்களாக சுப்பர் கம்பியூட்டர்கள் காணப்படுகின்றன.ஆயிரக்கணக்கான புரோசசர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக் கம்பியூட்டர்கள் ஒரு செக்கனில் பல மில்லியன் வரையான கணிப்புக்களை மேற்கொள்ள வல்லன.

இவற்றினை வானிலை அவதானிப்பு நிலையங்கள், அணு ஆயுதங்களை உருவாக்குதல், விமானங்களை வடிவமைத்தல், விண்வெளி ஆராய்ச்சிகள் போன்ற செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவார்கள்.இவ்வாறான கம்பியூட்டர்கள் உலகிலேயே சில நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.இவற்றுள் உலகிலேயே வேகம் கூடிய சுப்பர் கம்பியூட்டர் ஒன்றினைக் கூட கொண்டிராத சீனா அமெரிக்காவையும் தாண்டி முன்னணியில் திகழ்கின்றது.

அதாவது முன்னர் 159 சுப்பர் கம்பியூட்டர்களைக் கொண்டிருந்த சீனா தற்போது 202 கம்பியூட்டர்களைக் கொண்டுள்ளது.ஆனால் அமெரிக்கா முன்னர் 169 கம்பியூட்டர்களைக் கொண்டிருந்த போதிலும் அது தற்போது 144 ஆக குறைவடைந்துள்ளது.இதன் காரணமாக உலகின் வேகம் கூடிய முதல் 500 சுப்பர் கம்பியூட்டர்களில் சீனாவின் அதிக கம்பியூட்டர்கள் உள்ளடங்கியதன் மூலம் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னணியில் திகழ்கின்றது.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: