நாசாவை பின்னுக்கு தள்ளவிருக்கும் விண்வெளி நிறுவனம்!

Thursday, March 2nd, 2017

2018இல் இரண்டு நபர்களை சந்திர மண்டலத்துக்கு அழைத்து போக இருப்பதாக விண்வெளி நிறுவனமான spacecraft தெரிவித்துள்ளது.

விண்வெளி போக்குவரத்து சேவைகள் நிறுவனமான spacecraftன் நிறுவனர் Elon Musk அளித்துள்ள முக்கிய பேட்டியில், பூமியிலிருந்து 384,400 கிலோ மீற்றர் தூரம் உள்ள சந்திர மண்டலத்துக்கு வரும் 2018ல் இரண்டு பேரை அழைத்து செல்லவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இரண்டு சாதாரணமான தனி மனிதர்களை அங்கு அழைத்து செல்வது கடந்த 45 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்பதும் நாசாவுக்கு முன்னால் இதை செய்தால் இது சாதனையாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயணத்துக்கு ஒருவருக்கு $250,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களிடம் முன் பணமும் வாங்கப்பட்டுள்ளது. SpaceX நிறுவனத்தின் பால்கான் கன ராக்கெட் மூலம் இதை நிகழ்த்தவுள்ளனர். இந்த ராக்கெட் முதல்முறையாக சோதனை செய்யப்படவுள்ளது.

இதுவரை பல பயணங்களை வெற்றிகரமாக்கிய டிராகன் 2 விண்கலமும் இந்த பயணத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளது. சந்திர மண்டலத்துக்கு பயணம் செய்ய போகும் இரண்டு நபர்களின் விபரங்களை தெரிவிக்க Elon Musk மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: