ஒருமுறை அழுத்தினால் போதும்!

Monday, November 28th, 2016

இணையம் பல நேரங்களில் நமக்கும் ரிலாக்சாக இருக்கவும், போன் பில் கட்டுவது, சினிமா டிக்கெட் எடுப்பது போன்ற விடயங்களுக்கு உதவி செய்து நம் வேலையை சுலபமாக்கவும் உதவுகிறது.

அதே நேரத்தில் இணையம் மூலம் பொய் செய்திகள் பரவி மன உளைச்சலை ஏறப்படுத்துவது, நம் அக்கவுண்டை யாராவது ஹேக் செய்வது என பல பிரச்சனையும் உள்ளது.

நாம் இணையத்தில் வைத்துள்ள பல விதமான அக்கவுண்டுகளை நமக்கு தேவையில்லை மற்றும் அதிலிருந்து விடுபட நினைக்கும் பட்சத்தில் அந்த அக்கவுண்டுகளை வெகு சுலபமாக Delete செய்ய தற்போது ஒரு வழி உள்ளது.

அது தான் Deseat.me என்னும் வலைதளம் ஆகும். இதை ஸ்வீடன் நாட்டை சேர்ந்த Wille Dahlbo மற்றும் Linus Unneback ஆகிய கணினி வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதை பயன்படுத்துவது வெகு சுலபம். இதை பயன்படுத்தி இணைய அக்கவுண்டுகளை Delete செய்ய நினைப்பவர்களுக்கு கூகுளில் அக்கவுண்ட் இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.கூகுள் அக்கவுண்ட் மூலம் Deseat.me நாம் வைத்துள்ள அனைத்து அக்கவுண்டுகளும் ஸ்கீரினில் காட்டும்.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (2)

இப்போது எடுத்துகாட்டுக்கு பேஸ்புக் அக்கவுண்டை நாம் Delete செய்ய வேண்டுமென்றால் delete, ‘add to delete queue, ‘keep என ஆப்ஷன்கள் காட்டும். அதில் ஒரு அக்கவுண்டை மட்டும் அழிக்க Delete பட்டனையும், பல அக்கவுண்டுகளை அழிக்க add to delete queueவை கிளிக் செய்ய வேண்டும்.இப்படி செய்வதின் மூலம் அந்த அக்கவுண்டுகள் சுலபமாக Delete ஆவதை நாம் காண முடியும்

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)

Related posts: