சந்திரனில் மிகப்பெரிய குகை !

Saturday, October 21st, 2017

சந்திரனுக்கு முதன் முதலாக அமெரிக்கா மனிதர்களை அனுப்பி சரித்திர சாதனை படைத்தது. அதை தொடர்ந்து இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் சந்திரனில் ஆய்வு மேற்கொண்டன.

தற்போது ஜப்பானின் செலீன்  விண்கலம் சந்திரனில் ஆய்வு நடத்தி வருகிறது. அது எடுத்து அனுப்பிய போட்டோக்கள் மூலம் சந்திரனில் மிகப்பெரிய குகை இருப்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அக்குகை 50 கி.மீட்டர் 131 மைல் நீளமும், 100 மீட்டர் அகலமும் கொண்டது. இது சந்திரனில் உள்ள மாரியஸ்  என்ற எரிமலையில் உள்ளது.

அது வெடித்ததில் வெளியேறி ஓடிய எரிமலை குழம்பு சென்ற வழி குழாய் போன்ற அமைப்பில் உள்ளது. அதுவே மிகப்பெரிய குகையாக மாறியுள்ளது.இந்த குகை 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். குகையில் சந்திரனுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் தங்க முடியும்.அதன் மூலம் சந்திரனை தாக்கும் அதிகஅளவு தட்பவெப்ப நிலை மற்றும் கதிர் வீச்சில் இருந்து அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.இத்தகவல் ஜியோபிசிக்கல் ஆராய்ச்சி கடிதங்கள் என்ற அமெரிக்க அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது

Related posts: