ஆடுகளை வேலைக்கு அமர்த்தும் கூகுள்!

Monday, September 5th, 2016

கூகுள் நிறுவனம், உலகளாவிய ரீதியில் தனது ஸ்ட்ரீட் வியூ திட்டத்தை அறிமுகம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது ஆனால் இதனை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லும் முகமாக இத்திட்டத்திற்காக ஆட்டு மந்தையை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.

இதன் முக்கிய நோக்கம் உலகின் மூலை முடுக்குகளை 360 டிகிரி கோணத்தில் காட்டுவதே. இதற்கு முன்னர் அறிமுகம் செய்ததில் சில பாதை வழிகள் காட்டாமல் இருந்தமை குறிப்பிடதக்கது. அதன் பொருட்டே இந்த செயல்முறை நடைமுறைக்கு வரவுள்ளது.

மேப்ஸ் வசதியின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக வெளிவரவுள்ள இந்த திட்டத்தில் ஆடுகளின் மூலம் குறித்த இடங்களை பதிவு செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லா தீவுகளில் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை எடுப்பதற்காகவே ஆடுகளின் மீது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களுடன் இணைக்கப்பட்ட கேமிராக்களைப் பொருத்தி அதன் மூலம் வீடியோ பதிவுகளை எடுக்க கூகுள் நிறுவனம் தயாராகிகொண்டிருகின்றது.

மேலும், இந்த திட்டத்தினை அண்டார்டிகா, அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகளிலும் செயல்படுத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது.

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)

Related posts: