ஒபரா இணைய உலாவில் புதிய வசதி
 Monday, April 25th, 2016
        
                    Monday, April 25th, 2016
            இணையத் தேடலில் பயனர்களுக்கு ஏற்ற வசதியை வழங்கும் இணைய உலாவிகளில் ஒபெராவும் (Opera) ஒன்றாகும்.
இவ் உலாவியானது தற்போது VPN (Virtual private network) வசதியை உள்ளடக்கியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
VPN என்பது பொதுவாக வழங்கப்படும் வலையமைப்பிலிருந்து தமது தரவுகளை பாதுகாப்பதற்காக பிரத்தியேக தரவுப் பரிமாற்றத்தை மேற்கொள்வதை குறிக்கும்.
இதன்போது குறித்த கணினியின் IP முகவரியினை மாற்றிக்கொள்ளவும் முடியும்.முன்னர் இவ் வசதியினைப் பெறுவதற்கு தனியான மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் முதன் முறையாக ஒபெரா இணைய உலாவியில் இணைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனினும் இவ் வசதியினை அனைத்து வகையான கணினிகளிலும் பெற முடியாது எனவும், டெக்ஸ்டாப் கணினிகளில் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவ் உலாவியில் 256-Bit தரவு குறியாக்கமும் (Encryption) உள்ளடக்கப்பட்டுள்ளது
Related posts:
ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வால் பயங்கரமாக மாறிய 5 மனிதர்கள்!
245 பேர் பாலத்தில் ஒரே நேரத்தில் ஊஞ்சலாடி சாதனை!
ஏலியன்கள் தொடர்பில்  அதிர்ச்சி தகவல்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        