ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வால் பயங்கரமாக மாறிய 5 மனிதர்கள்!

Saturday, September 10th, 2016

மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது. ஒருவருக்கு போதிய அளவு தூக்கம் கிடைக்காவிட்டால், அதனால் உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதுக்குறித்து ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் ஓர் சோதனை மேற்கொள்ள நினைத்தனர்.

அது ஒருவர் ஒரு மாதம் தூங்காமல் இருந்தால், என்ன நடக்கும் என்பது பற்றி தான். இந்த சோதனைக்கு 5 கைதிகளைப் பயன்படுத்தி, இச்சோதனையை வெற்றிகரமாக முடித்தால், விடுதலை செய்வதாக அக்கைதிகளிடம் கூறினர்.

இந்த சோதனை 1940 ஆம் ஆண்டு, ரஷ்ய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது 5 கைதிகளையும் ஒரு அறையில் அடைத்து, தூக்கத்தைத் தடுக்கும் வாயு அளவாக வெளிவருமாறு செய்தனர். அந்த அறையில் கைதிகளுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான போதிய உணவுகள், தண்ணீர், புத்தகங்களுடன், மெத்தை இல்லாத கட்டில், கழிவறை வசதியும் இருந்தது. அவர்களுடன் தொடர்பில் இருக்க மைக்ரோபோன் கொடுக்கப்பட்டிருந்தது.

சோதனையின் முதல் மூன்று நாட்கள், கைதிகள் எவ்வித பிரச்சனையுடன் நன்றாக இருப்பதைத் தெரிவித்தனர். 30 நாட்கள் இந்த சோதனையை முடிக்காவிட்டால், விடுதலை செய்யமாட்டோம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியதற்கு, நிச்சயம் முடிப்போம் என்று ஐவரும் தங்கள் முடிவைத் தெரிவித்தனர்’

கைதிகளின் செயல்கள் மற்றும் நடவடிக்கைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வந்தனர். நான்காம் நாளில் கைதிகளுள் ஒருவர் கடந்த காலத்தில் அவர் சந்தித்த பேரதிர்ச்சியைப் பற்றி கூறினார். ஐந்தாம் நாளில், கைதிகளுக்கு சித்தபிரமை பிடித்தது போல் பேச ஆரம்பித்தனர். பின் அவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்தனர்.

FJB7vUfj800x480_IMAGE55690971

பத்தாம் நாளில் ஐவரும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். ஒருவர் அறையில் முன்னும் பின்னும் ஓடிக் கொண்டே கூச்சலிட்டார். பின் அவர்களது குரல் பலவீனமாக தொடங்கி, பின் சுண்டெலி போல் கீச்கீச் என்ற குரல் மட்டு தான் வெளிவந்தது. அதற்கு அவர்களின் கூச்சலால் குரல் நாண்கள் கிழிந்திருக்கக்கூடும் என்று அங்கிருந்த மருத்துவர்கள் கூறினர்.

சில நாட்களில் அந்த அறையில் இருந்து எந்த ஒரு சப்தமும் வெளிவரவில்லை. ஆகவே 14 ஆம் நாள் அந்த ஆராய்ச்சியாளர்கள், மீண்டும் இண்டர்காம் பயன்படுத்தி தொடர்ந்து கொண்டனர். இந்த சோதனைக்கு ஒத்துழைப்பு தந்தால், உங்களை விடுவிப்பதாக தெரிவித்தனர்.

15 ஆம் நாளன்று ஆராய்ச்சியாளர்கள், அந்த அறையில் தூக்கத்தைத் தடுக்கும் வாயு வெளியேற்றத்தைத் தடுத்து, சுத்தமான காற்றை வெளியிடச் செய்தனர். அப்போது ஒரு கைதி, தூக்கத்தைத் தடுக்கும் வாயுவை வெளியிடச் செய்யுமாறு கெஞ்சினார்.

அந்நேரம் மீட்பு படையினர்கள் அந்த அறைக்குள் சென்று பார்த்த போது, ஐந்தில் 4 பேர் மட்டும் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் 5 நாட்கள் எதையும் உட்கொள்ளாமல் இருப்பதும் தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, இறந்த கைதியின் தொடை மற்றும் மார்பு பகுதியில் இருந்த தசைப்பகுதி காணாமல் போனதோடு, அங்கிருந்த வடிகாலில் ஒட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எஞ்சிய கைதிகள் உயிருடன் இருந்ததாலும், அவர்களது உடலில் தோலும், தசையும் இல்லாமல், காயங்களுடன் பயங்கரமாக காட்சியளித்தனர். நன்கு அனுபவமிக்க மீட்பு படையினர்கள், அந்த இறந்த சடலத்தை வெளியே கொண்டு வரவே அஞ்சினர் என்றால் பாருங்கள்.

பின் நான்கு கைதிகளும் வன்முறையில் ஈடுபட்டனர். அதில் ஒரு கைதி இன்னொருவரைக் கொன்றார். ஏன் இப்படி வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்று கேட்டதற்கு ஒரு கைதி, ‘நான் விழித்திருக்க வேண்டும்’ என்று பதிலளிக்கிறார். இப்படி மனநிலை பாதிக்கப்பட்டு, பயங்கரமான தோற்றத்துடன் இருந்த அவர்களை இறுதியில் மீட்டு படையினரும், ஆராய்ச்சியாளர்களும், துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டனர்

Related posts: