ஐரோப்பா கண்டத்தில் உள்ள தீவு ஆறு மாதத்திற்கு ஒரு தடவை நாடு மாறும் ஆச்சரியம்!
Friday, February 2nd, 2018
ஐரோப்பா கண்டத்தில் உள்ள தீவு 6 மாதத்திற்கு ஒரு தடவை இரு நாடுகளுக்கு இடையே மாறி வருகின்றது.
ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை பிரித்து செல்லும் எல்லையாக பீடாகோ ஆறு காணப்படுகிறது. இவ் ஆற்றின் நடுவே 200மீற்றர் நீளமும் 40 மீற்றர் அகலமும் கொண்ட பிசான் தீவு காணப்படுகிறது. இத்தீவு குறித்து 2 நாடுகளுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்பட்டு வந்துள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே 1659 ஆம் ஆண்டு 3 மாத பைரனீஸ் என்னும் ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 1முதல் ஜீலை 31 ஆம் திகதி வரை ஸ்பெயின் அரசிடமும் எஞ்சிய 6 மாதங்களுக்கு பிரான்ஸ் அரசிடமும் இத் தீவு காணப்படும் என ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.இதனால் இத்தீவு 6 மாதத்திற்கு ஒரு தடவை நாடு மாறி காணப்படுகிறது.
Related posts:
உலகின் விலை உயர்ந்த அன்ட்ரொய்ட் போன் அறிமுகம்!
பூமியை நோக்கி வரும் விண்கற்களால் சுனாமி அனர்த்தம்?
ஆஸி. வீரர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர் - கிளேன் மெக்ராத்!
|
|
|


