எரிபொருள் இன்றி பயணிக்கும் நாசாவின் தொலைகாட்டி!

கோள்கள் மற்றும் நட்சத்திரங்களை அவதானிப்பதற்காக ஹெப்லர் எனும் தொலைகாட்டியினை நாசா விண்வெளி ஆய்வு மையமானது விண்ணிற்கு அனுப்பியிருந்தது.
இந்த தொலைகாட்டியானது தற்போது எரிபொருள் முடிந்த நிலையில் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்ப்பதற்காக செயலற்ற நிலையில் பேணப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வான்வெளியில் Cygnus-Lyra பகுதயில் பயணித்தவாறே இந்த தொலைகாட்டி சுமார் 150,000 நட்சத்திரங்களை கண்காணித்து வருகின்றதுடன் 4,600 வரையான கோள்களையும் கண்டுபிடித்துள்ளது.
அதேவேளை பூமியில் இருந்து சுமார் 94 மில்லியன் மைல்களுக்கு அப்பால் பயணிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
30 வருட சந்தேகத்திற்கு கிடைத்த பதில்!
துபாயில் கண்காட்சியில் இடம்பெற்ற தங்ககார்
245 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட அற்புத கோப்பை!
|
|